புலமைப்பரிசில் பெறுபேறுகளை, ஒக்டோபர் ஐந்தாம் திகதியளவில் வெளியிடத் தீர்மானம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதியளவில் வெளியிட முடியும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்

கடந்த நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இ்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள், 15 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகத் தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, இம்முறை 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts