புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சுவாட் அமைப்பு 2000ருபா பெறுமதியான பொதிகள்!

காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு முறைப்பாடு கிடைக்கப்பெற்ற புலம் பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000ருபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் சுவாட்  நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் நேற்று  வழங்கிவைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வு  பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  தி.மோகனகுமார்  அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இனணப்பாளர் ஐ.எல்.எம் இர்பான்  சுவாட் நிறுவனத்தின் காரைதீவு இணைப்பாளர் எஸ். ஆனந்தன்  மற்றும் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.
 
காரைதீவுப்பிரதேசத்தில் இவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்ப்ங்கள்.சுமார் 126 குடும்பங்கள் இருக்கி;ன்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Share this...
Share on Facebook
Facebook

Related posts