பெரியகல்லாற்றில் இரவு வேளையில் வீட்டினுள் நடந்த சம்பவம் ! பெண்கள் மத்தியில் பெரும் அச்சம் !

பெரியகல்லாறு – 01 மகாவித்தியாலய வீதியில் ம.கிருபைராஜா என்பவரின் இல்லத்தில்  இன்று புதன்(04) அதிகாலை 2.30 மணியளவில் அவரது மனைவியின் 15பவுண் தங்ககொடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கிருபைராஜா தம்பதிகள் சம்பவ தினத்தன்று ஆழ்ந்த நித்திரையில் இருந்திருக்கின்றனர். அவ்வேளையில் அதிகாலை 2.30 மணியளவில் அவர்களின் கிழக்குப்பக்கமாக உள்ள ஒழுங்கை மதிலின் ஊடாகப் பாய்ந்து வந்த திருடன், ஆபரணத் தொழில் செய்யும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நெற் வழியாக கையை விட்டு கதவைத் திறந்து.

உறக்கத்தில் இருந்த திருமதி கிருபைராஜாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை திருடன்  நறுக்கி  எடுத்துள்ளான் இதன் பின் திருமதி கிருபைராஜா திடுக்கிட்டு விழித்தபோது, கேற்றில் பூட்டாமல் இருந்த பூட்டை கழட்டிவிட்டு திருடன் இலகுவாகத் தப்பிச் சென்றுள்ளான்.

பெரியகல்லாறு 3ல் சில நாட்களுக்கு முன்பதாக சோதிநாதன் என்பவரின் இல்லத்தில் அதிகாலை 2.00 மணியளவில்  பாரிய பயங்கர கொள்ளை ஒன்று சோதிநாதன் தம்பதிகளை கடுமையாக தாக்கி இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பெரியகல்லாற்றில் இனத்தெரியாதவர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும். பகல் வேளைகளில் கூட மோட்டார் சைக்கிளில் வரும் இனம்தெரியாத நபர்கள் தனியாகச் செல்லும் பெண்களின் பல கழுத்துச் சங்கிலிகளை அறுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இரவம் பகலும் அச்ச உணர்வுடன் தாங்கள் இருக்க வேண்டியள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பெரியகல்லாற்றில் இரவம் பகலும் பொலிசார் அடிக்கடி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவெண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts