பொதுச்சுகாதார பரிசோதகராக வேல்முருகு நியமனம்!

காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகராக சாமித்தம்பி வேல்முருகு நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்றுமுன்தினம் அவர் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். அவர் இறுதியாக கல்முனை வடக்கு சுகாதாரப் பிரிவில் பொதுச்சுகாதாரபரிசோதகராக கடமையாற்றியிருந்தார்.
 
காரைதீவைச்சேர்ந்த சா.வேல்முருகு ஏலவே ஆலையடிவேம்பு கல்முனை காரைதீவு போன்ற பிரதேசங்களில் பொதுச்சுகாதாரப்பிரிசோதகராக 22வருடங்கள் சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின்  சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகராகவிருந்த ஜ.எல்.லாபீர் கல்முனைப்பிராந்திய மாவட்ட மேற்பார்வை  பொதுச்சுகாதாரப் பரிசோதகராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார். இவரது இடத்திற்கு வேல்முருகு பதவியுயர்வு பெற்று வந்துள்ளார்.
 
இதேவேளை காரைதீவுப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில்  பொதுச்சுகாதார பரிசோதகராகவிருந்த எம்.ஜமால்டீன்  கல்முனை வடக்கு சுகாதாரப் பிரிவிற்கு பொதுச்சுகாதாரபரிசோதகராக இடமாற்றம்பெற்றுசென்றுள்ளார்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts