மகளிருக்கு பல அபிவிருத்தித் திட்டங்கள்

இ.சுதா
 
தமிழர் முற்போக்கு முன்னணியினால் மட்டு மாவட்டத்தில் மகளிருக்கு பல அபிவிருத்தித் திட்டங்கள்
 
முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவிப்பு
 
தமிழர் முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவை மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
 
மட்டு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டு மாவட்டத்தில் மகளிரை மையப்படுத்தியதாக பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பாக மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
 
மகளிர் மேம்பாட்டுக்குப் பொறுப்பாக தமிழர் முற்போக்கு முன்னணியின் மட்டு மாவட்ட மகளிர் தலைவியாக இராஜநாயகம் சுகந்தநாயகி கட்சியினால் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.அவருடைய வழி நடத்தலின் கீழ் மட்டு மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.குறிப்பாக பாடசாலைக் கல்வியினை முடித்து பல்கலைக்கழக அனுமதி பெறாத மகளிரை தொழில் உலகிற்கு வழிப்படுத்தக் கூடிய தொழில் பயிற்சி வழங்குதல் இவர்களை வழிப்படுத்த ஒவ்வொரு பிரதேச செயலங்களிலும் இணைப்பாளர்களை நியமித்தல்,கட்சியின் உயர் மட்ட தீர்மானங்களுக்கு அமைவாக வெளிநாட்டிலிருந்து தொழில் பயிற்சியாளர்களை வரவழைத்து பெண்களுக்கு தொழில் பயிற்சி வழங்குதல்,இது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்ததுடன் யுத்தம் காரணமாக கணவன்மார்களை இழந்த பெண்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் மாத்திரமன்றி அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தல் மற்றும் பிரதேச ரீதியாக வளங்களை இனங்கண்டு சுய தொழில்களில் ஊக்குவித்தல் சிறு கைத்தொழில் மேம்பாடு பண்ணை உற்பத்தி முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்தார்
 
 
Share this...
Share on Facebook
Facebook

Related posts