மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை

சந்திரன் குமணன்
அம்பாறை.
 

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில்   ஊடகவியலாளர் சந்திப்பு  திங்கட்கிழமை(1) முற்பகல் இடம்பெற்ற போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

எமது கல்முனைப் பிராந்தியத்தில் பொறுத்தளவில் 68 அரசினால் பதியப்பட்ட தனியார் மருந்தகங்கள் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் எமது மக்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் கொவிட் 19 தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக காணப்பட்ட வேளையில் நாங்கள் சுகாதார அமைச்சுக்கு வைத்து கோரிக்கைக்கு அமைய  மருந்தகங்கள்  வீடு வீடாக சென்று மக்களுக்கு மருந்துகளை வினியோகம் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார்கள்.

மருந்து என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் பாதுகாப்பாக கிடைக்க வேண்டிய ஒரு பொருள் அதன் உறுதிப்பாட்டை தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு சுகாதார திணைக்களத்திற்கு உள்ளது. வேறு எந்தவிதமான புறக்காரணிகள இல்லாமல் மருந்தகங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்படவண்டிய விடயம் தொடர்பாக குறிப்பாக அங்கு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அது கல்வித் தகமை, சுகாதாரம் , காலாவதி திகதி ,மருந்துகளின் தரம் சேமித்து வைக்கும்  இடம், போதை ஏற்படுத்தும் மருந்துகள் , மருந்து சிட்டைகள் அன்றி மருந்துகளை விநியோகம் செய்கின்றார்களா போன்ற விடையங்களில் சுகாதார திணைக்களம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து  தொடர்ச்சியாக பாதுகாப்பு துறையினருடன் சென்று கடந்த ஒரு மாத காலத்திற்குள்  ஐந்திற்கு மேற்பட்ட பார்மசிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கும் ஒரு சில பார்சிகள் மூடப்பட்டிருக்கின்றன. மருந்தகங்களை பொறுத்தளவில் அவர்கள் மிகுந்த தார்மீக பொறுப்புடையவர்ளாக அவர்களை பார்த்து இருக்கின்றோம். அந்த தார்மீக பொறுப்புகளில் இருந்து அவர்கள் விலகக்கூடாது. எங்களுக்கு தேவை எமது பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த மருந்து வகைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதாகும் என்றார்.

Share this...
Share on Facebook
Facebook

Related posts