மட்டக்களப்பில் ரணவிரு சேவாஅதிகாரசபையின் 10ஆண்டு நிகழ்வு.


ரணவிரு சேவா அதிகாரசபையின் பத்தாவது ஆண்டு பூர்த்தியினையும், கொடிவாரத்தினையும் நாடுபூராகவும்  நடாத்திவருகின்றது.மேற்படி இந்நிகழ்வு திங்கட்கிழமை(10)காலை 10.00மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அதிகாரசபையின் இணைப்பாளர் திருமதி கீர்த்திக்கா ஐயசிங்க கொடிதினத்தினை ஆரம்பிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரும்,மாவட்டச் செயலாளருமான மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கு முதற்கொடியினை அணிவித்து கொடிவாரத்தினை ஆரம்பித்து வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்,பிரைதேச செயலாளர்கள்,செயலக உத்தியோகத்தர்களுக்கு ரணவிரு சேவாகொடி அணிவிக்கப்பட்டது.இவ்வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக முப்படையினர்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

????????????????????????????????????
????????????????????????????????????
Share this...
Share on Facebook
Facebook

Related posts