மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது – கண்டனத்தினை வெளியிட்டது சுவிஸ் உதயம் அமைப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான நாசகாரச் செயலாக இருப்பதுடன் சுதந்திரமாக வழிபாட்டை மேற்கொள்ள முடியாத நிலையனை ஏற்படுத்தியுள்ளனர் இவ்வாறான சூத்திரதாரிகளை யாரென்று புலனாய்வாளர்கள்இமுப்படையினர் கூட்டாக இணைந்தும்இகண்டுபிடித்தும் பொதுமக்களின் பாதுகாப்பை மட்டக்களப்பில் உறுதிப்படுத்த வேண்டுமென சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டிக் கொண்டிருந்தபோது அதற்குள் நுழைந்துஇமிகவும் நுட்பமாகவும்இ திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கண்டனம் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்தவை வருமாறு:-
சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான கீழ்த்தரமான தாக்குதலாகும். இவ்வாறான செயல்கள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை ஆகும்.யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்
இத்தாக்குதலில் பச்சிளம் பாலகர்கள்இ முதியோர்கள்இபெண்கள்இபொதுமக்கள் என பாகுபாடின்றி மத ஆராதனையில் ஈடுபட்டுக்கொணடிருக்கின்றபோது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை மிகவும் வேதனையைத் தந்தும் கவலையளிக்கின்றது.இதனை கடவுளும்கூட மன்னிக்கமாட்டார் .இதனால் மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளார்கள்.கவலையுடனும்இகண்ணீருடனும் இருக்கின்றனர் எனவே இவ்வாறான மத வெறிபிடித்த காட்டு மிராண்டிச் செயற்பாட்டை சுவிஸ் உதயம் அமைப்பு முற்றாகக் கண்டிக்கிற்றது என சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் பிரதிச் செயலாளர்; மற்றும் நிருவாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Share this...
Share on Facebook
Facebook

Related posts