மட்டக்களப்பு மத்தி வலயக் அலுவலக வலயக்கல்விப் பணிப்பாளராக எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமனம்

மட்டக்களப்பு மத்தி வலயக் அலுவலக வலயக்கல்விப் பணிப்பாளராக மருதமுனையை சேர்ந்த டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமிக்கப் பட்டுள்ளார் .

இந்த நியமனம் கிழக்கு மாகாண கல்வி தகவல் தொழில்நுட்பக்கல்வி ,முன்பள்ளிக் கல்வி ,விளையாட்டுத்துறை ,பண்பாட்டலுவல்கள் ,இளைஞர் விவகாரம்,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஐ.ஜி .கே. முத்துபண்டாவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13.11.2018 இலிருந்து செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது.

அரச கல்வி நிருவாக சேவை தரம்- 11 அதிகாரியான டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரியின் அதிபராகவும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர் . தற்போது கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையிலிருக்கும் போதே மட்டக்களப்பு மத்தி வலயக் அலுவலக வலயக்கல்விப் பணிப்பாளராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்

Share this...
Share on Facebook
Facebook

Related posts