மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுப்பிரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவி தேர்தல் ஆணையாளரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுப்பிரிவு தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கி வருகின்றது.
 
முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை ஐந்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.இதில் அரசாங்க அலுவலர்கள் அரசாங்க பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பான முறைப்பாடுகளுடன், பொருட்கள் விநியோகம்,சட்ட விரோத காட்சிப்படுத்தல், ஊடகங்களில் ஒரு கட்சிசார் தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதும், அடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் கடமை நேரங்களில் வருகின்ற நோயாளிகளுக்களுக்கு தேர்தல் பிரச்சாரங்கள் செய்து வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts