மட்டக்களப்பு வைத்தியசாலை ஊழியர்கள் பாராட்டுக்கு உரித்தானவர்கள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரு மாவட்ட செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா மற்றும்  சிவில் சமூக அமைப்பினரும் அதன் போசகரான மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையின் பணியாளர்களான வைத்திய நிபுனர்கள் வைத்தியர்கள் வைத்திய உதவியாளர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் தாதியர்கள் மருத்துவ மாதர்கள் மருந்தாளர்கள் மருத்துவ உதவியாளர்கள் ஊழியர்கள் சிற்றுழியர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கனேசலிங்கம் மற்றும் நிருவாகத்தினர் ஆகியோரின் அற்பணிப்பு மிக்க தியாக சிந்தனை கருனை மிக்க பணியினை  மனதார உளம்கனிந்து பாராட்டினாரகள்;.
 
நமது மக்கள் வழமையில் விமர்சனங்களை மாத்திரம்ந்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் முகநூல்களில் உண்மையை ஆராய்ந்து பார்பதற்கு கூட நேரம் இன்றி தங்குதடையின்றி பதிவதும் மற்றவர்களுடன் உரையாடிக்குகொள்வதாகவே நமது வழக்கமாக உள்ளது அதற்கு மாறாக இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அற்பணிப்பான சேவையினை நாம் கண்டுகொள்ளாதவர்களாக இருந்துவிடக்கூடாது அரசசேவையாளர்தானே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது அவர்கள் வேலைசெய்யத்தான் வேண்டும் என்று கூறலாமா? இன்றையகாலகட்டத்தில் அவர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் குடும்பம் என்ற ஒன்று உள்ளது நாம் வைத்தியசாலைக்கு செல்ல பயப்பிடுகின்ற காலத்தில் அவர்கள் அங்கிருந்து பணியாற்றுவது என்பது ஒருவகை அற்பணிப்பாகும் அற்காகவே நாம் பாராட்டுகின்றோம் என குறிப்பிட்டனர்
 
அற்பணிப்புடன் தங்களின் குடும்பம் குழந்தைகளை எல்லாம் மறந்து 24 மணித்தியாளமும் விடுதிகளில் தங்கியிருந்தும் தங்கள் பணியினை ஆற்றிவருகின்றனர் அவர்களுக்கான உணவுக்குகூட வீடுகளுக்கு  செல்லமுடியாதவர்களாக உள்ளனர் அதற்காக பணிப்பாளரி சிறப்பான செயல்ப்பாட்டினால் அவர்களுக்குன உணவு. விடுதில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது இதனைத்தவிரவும் புனர்வாழ்வு மத்திய நிலைத்தினுடாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பு உணவுக்குத்தேவையான உதவியை வழங்கவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக சிவில் அமைப்பின் உறுப்பினர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார.;
 
நமது மக்களுக்கு முக கவசங்களை பாவிக்கும் படியாக சுகாதார தரப்பினர் பணிக்கின்றபோதும் அதனை சில மணி நேரம்கூட அணிவதற்கு தயாரில்லாதபோது இந்த அற்பணிப்பு மிக்க வைத்தியசேவையினை வழங்கிவருகின்ற வைத்தியர்களும் தாதியர்களும் பாதுகாப்பு அங்கியினை தொடர்ந்து 12 மணித்தியாலமாக அணிந்து கொன்டு தங்களின் கன்னியமான பணியினை தங்கள் உயிரையும் மதிக்காது சேவையாற்றுவது இறைவனுக்கு இணையான சேவை என மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களு மட்டக்களப்பு மாவட்ட அரசாங் அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா பாராட்டி புகழ்ந்தார்.
 
????????????????????????????????????
Share this...
Share on Facebook
Facebook

Related posts