மதுபோதையில் வாகனம் செலுத்திய 263 சாரதிகள் கைது

ஆறு மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 263 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக விஷேட நடவடிக்கை கடந்த 05ம் திகதி ஆரம்பமாகியது. 
நேற்று காலை 06.00 மணி முதல் இன்று காலை 06.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 
அதன்படி மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யுத் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இன்று வரை 1763 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share this...
Share on Facebook
Facebook

Related posts