மு.காவினை நாம் பலப்படுத்த வேண்டும்

மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் ஆளுமைகளும் அவரது தூர நோக்கு மிக்க பார்வையும் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நிறைந்து காணப்படுகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
 
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவினை ஆதரித்து  அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேற்தற் பிரசாரகூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், மறைந்த தலைவரின் வழியில் நின்று செயற்படும் தற்போதைய தலைவரின் தூர நோக்கு மிக்க செயற்பாடொன்றின் மூலம் நமது முஸ்லிம் சமூகத்தின் மீதிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்தது.
 
நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைமைகளை ஒன்றிணைத்து அவரின் தலைமையில் தீர்மானம் மிக்க நடவடிக்கையொன்றை எடுத்திருந்தார். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட போலி பயங்கரவாத இட்டுக்கட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இவர் செயற்பட்டமையானது முழு முஸ்லிம் சமூகத்தினாலும் வரவேற்கத் தக்க விடயமாகப் பார்க்கப்பட்டது.
 
இதன் பின்னர்தான் நமது சமூகம் மீதிருந்த சந்தேகப் பார்வை முடிவுறுத்தப்பட்டது. எமது சமூகத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. வட கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குரிய ஓர் நிலைமை ஏற்பட்டது.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் நீடித்திருந்த கொடிய யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நிலையான சமாதானத்திற்கு வழிவகுத்தார். மஹிந்த ராஜபக்ஷவிற்காக வேண்டி நாம் இன்னோருவருக்கு ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்களிக்க முடியாது.
நாம் கிழக்கு மாகாண சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தபோது அவர்களது ஆட்சியில் கருமலையூற்றுப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. இராணுவப் பாதுகாப்பு அரணுக்கு பக்கத்தில் இருந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் பங்காளிகளாக இருந்தபோதிலும் அந்தப் பள்ளிவாசலைச் சென்று பார்ப்பதற்குக் கூட எமக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
 
கிழக்கு மாகாணத்தில் அதுவும் கருமலையூற்றுப் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றுமே இருக்கவில்லை என அப்பட்டமாக அப்போது சொல்லப்பட்டது. ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்கொண்டபோது அந்தப் பள்ளிவாசலினை புனரமைத்து மக்களுக்கு வழங்கி வைத்தார்கள். அப்போது இல்லை என்ற பள்ளிவாசல் பின்னாளில் எவ்வாறு உருவானது என்பதை நாம் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும.
தற்போது இந்நாட்ல் இருக்கின்ற இனவாத சிந்தனையினை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான நாம் அனைவரும் பலத்தப்படுத்த வேண்டிய ஓர் தேசிய இயக்கம் என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டுமே என்றார்.
Share this...
Share on Facebook
Facebook

Related posts