அக்கரைப்பற்று மாநகரசபையில் அறுவடை : மாநகரில் அமுல்படுத்த யோசனை !!

நூருள் ஹுதா உமர். 
 
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட சேதனப் பசளையினை பயன்படுத்தி, அக்கரைப்பற்று மாநகர சபை வளாகத்தில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் மாநகர முதல்வர் அதாவுல்லாஹ் அஹமட் சக்கி தலைமையில் இன்று (23) அறுவடை செய்யப்பட்டது.  
 
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர், கால்நடை வைத்திய அதிகாரி, சுகாதார மேற்பார்வையாளர், மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
 
இங்கு அதிகாரிகள் முன்னிலையில் கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாவுல்லாஹ் அஹமட் சக்கி, மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத்திட்டமானது சிறந்த ஒரு செயற்பாடாகும். இதனை எதிர்வரும் காலங்களில் இன்னும் பரவலடைய செய்ய வேண்டும் எனவும், இத்திட்டத்தினை முன்மாதிரியாக பயன்டுத்தி மாநகர மக்கள் தங்களது வீடுகளிலும் இவ் அணுகு முறையினை பயன்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார். 

Related posts