அமைச்சரின் உறுதிமொழியையடுத்து ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் சாரதிகள், காவலர்கள், ரயில் நிலையதிபர்கள், கட்டுபாட்டாளர்கள் மற்றும் மேற்பார்வை முகாமையாளர்கள்(26) நள்ளிரவிலிருந்து முன்னெடுக்க திட்டமிட்டிருந்த 48 மணிநேர பணிப்புறக்கணிப்பானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் பிர​தான செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் போக்குவரத்து மற்றும்  சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ரயில் தொழிற்சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, ஒரு மாத காலத்துக்குள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக கடிதம் மூலம் அமைச்சர் வாக்குறுதி வழங்கியதால் தாம் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரயில் தரம் தொடர்பில் வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை அங்கீகாரம் இரண்டு இதுவரை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவிருந்தது.

Related posts