அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நூற்றுக்கணக்கான மாவீரர் பெற்றோர்களின் கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

கார்த்திகை 27 தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று 27 அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலிமில்லத்தில் மிக உணர்வுபூர்வமாக கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்ல செயற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
அந்தவகையில் தேச விடுதலைக்காக போராடி உயிர்நீர்த்த 800 க்கு மேற்பட்ட மாவீரர்களுக்கான அகலவிளக்குகள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுகூறப்பட்டது.
அத்துடன் இன்றைய நாள் பிரதான அகலவிளக்கினை விநாயகபுரத்தைச்சேர்ந்த  மூன்று மாவீரர்கள் மற்றும் ஒரு முன்னால் போராளியின் தாயுமாக கனகசுந்தரம் தில்லையம்மாவினால் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்துகொண்டு மாவீரர்களுக்காகவும் ஈழ போராட்டத்தில் உயிரநீர்த்த தனது சகோதரத்திற்காகவும் அஞ்சலி செலுத்தியமை
குறிப்பிடத்தக்கது.

Related posts