அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள் வாழ்வாதார அபிவிருத்தியில் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றனர்

அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள் வாழ்வாதார அபிவிருத்தியில் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றனர் என்கின்றார் முன்னாள் போராளி நாகமணி கிருஸ்ணபிள்ளை.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது ஜீவனோபாயங்கள் தொடர்பாக இன்று 04  ஆம் திகதி அம்பாறை மாவட்ட திருக்கோவில் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
முன்னாள் போராளிகளாகிய நாம் பல வருடங்களாக போராட்டத்திலிருந்து புனர்வாழ்வு பெற்று இப்போது சமுகமயப்பட்டுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றோம் ஆனால் அவர்களது வாழ்வாதாரம் என்பது கனிசமான அளவிலேயே கிடைக்கப்பெறுகின்றது அந்தவகையில் புனர்வாழ்வு அமைச்சின் மூலமாக புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கேன வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் ஒரு சிலருக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.
இவர்களுக்கான வாழ்வாதார வசதிகளும் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக குறைந்த விதத்திலேயே வழங்கப்பட்டுள்ளது அவ்வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் மாற்றுத்திறணாளிகள் முன்னாள் போராளிகளுக்கு என வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு தொடர்பாக விசேடமாக எதுவும் அதிகரிக்கப்படவில்லை.
உண்மையிலேயே அவர்களுக்கு தான் விசேடமான தேவைப்பாடுகள் அதிகம் உள்ளன கடந்த பல ஆண்டு காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான போராளிகள் அங்கவீனமடைந்தும் உறுப்புக்கள் இயங்காத நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை இந்த நல்லாட்சி என கூறிக்கொள்கின்ற அரசாங்கம் இவர்களது வாழ்க்கை நிலையினை உயர்த்தி முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என  முன்னாள் போராளி நாகமணி கிருஸ்ணபிள்ளை கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts