அரசாங்கத்தின் என்ர பிறைஸ் சிறிலங்காஇலகு கடன் திட்டத்தில் மட்டக்களப்பில் 5கோடி ரூபா வழங்கல்.

அரசாங்கத்தின் என்ர பிறைஸ் சிறிலங்கா  இலகு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகள்,மீனவர்கள், மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு சுமார் 5கோடி ரூபா நிதியில் இலகு கடன் தொகை  19-08-2019 நடைபெற்ற விசேட நிகழ்வுகளில் வழங்கி வைக்கப்பட்டது.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் அமுல் நடத்தப்படும் இந்த என்ர பிறைஸ் சிறிலங்கா  இலகு கடன் திட்டத்தில் விவசாயிகள்,மீன்பிடி கைத்தொழில், மற்றும் கால்நடை உற்பத்தியாளாகள்,சூரிய சக்தியில் மின்சாரம் வழங்குதல் உட்பட பல துறைகளில் தொழில் முயற்சிகள் மேற்கொள்ள இந்த கடன் திட்டங்கள் வழங்கப்பட்டதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண வியாபார மேம்படுத்தல் முகாமையாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார். குறித்த இலகு கடன்கள் இன்று குறித்த வங்கியின் மாகாண அலுவலகம் ,மாவட்ட அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு  புதிய கிளை ஒன்று திறந்து வைக்கும் நிகழ்விலே இந்த இலகு கடன் வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் சட்டத்தரணி சுஜித் பிரசன்ன காரியவசம்,பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின்  உயர் அதிகாரிகள்,அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்,பொது மக்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 
இங்கு பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் கருத்து வெளியிடுகையில் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க புpரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிமுகம் செய்துள்ள என்ர பிறைஸ் சிறிலங்கா  திட்டத்தில் மிகக் குறைந்த வட்டியில் இலகு கடன்களை வழங்கி பிரதேச அபிவிருத்தி வங்கி நாட்டில் புதிய முயற்சியாளர்களையும்,விவசாய கால்நடை உற்பத்தியாளர்களையும் ,மீனவர்கள்,கைத்தொழில் உற்பத்தியாளர்கள்,மற்றும் சுற்றுலாத்துறை சார்பான தொழில் முயற்சியாளர்களை மேம்;படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.இலாபத்தை  நோக்காக அல்லாது அறிமுகப்படுத்தப்படும் இந்த இலகு கடன் திட்டத்தில் இப்பிரதேச மக்கள் நன்மையடைய வேண்டும் என்பதே எங்களது வங்கியின் குறிக்கோள் என குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் ஆர்.எம்.ஆர்.றந்தெனிய,மாவட்ட முகாமையாளர் வை.வீ.அஸ்ரப்,பிராந்திய சிரேஸ்ட முகாமையாளர் ஏ.எம்.றிபாய்,குறித்த வங்கியின் இரண்டாவது கிளையின் முகாமையாளர் திருமதி.எஸ்.குவேந்திரராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related posts