அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே எமது கட்சி விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளோம்

அரசாங்கத்தின் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே எமது கட்சி சார்பாக விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகள் நடத்துவதில்லை என முடிவு எடுத்துள்ளோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா.தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் தமது அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக இன்று 23 அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச விஜயத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ………………….

கடந்த 16 ஆம் திகதி என்னை கொழும்பில் அடைந்துள்ள இரண்டாம் மாடிக்கு விசாரணைகளுக்கான வரும்படி பயங்கரவாத குற்றத்தடுப்புப்பிரிவினரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் நான் சென்றிருந்தேன். அன்று நான் ஏற்பாடு செய்திருந்தேன் ஹிஸ்வுல்லாவிற்கு எதிரான விடயத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே அழைத்துள்ளனர் என ஆனால் அன்று நடைபெற்றது எனது கட்சி சார்பாக நடாத்திய கறும்புலி தின நிகழ்வுகள் தொடர்பான விசாரணை அன்று சுமார் 06 மணி நேரம் என்னை விசாரித்தனர் கநும்புலி தின நிகழ்வு செய்வதற்கு எங்கிருந்து பணம் வந்தது எவ்வளவு பணம் அனுப்பி வைக்கப்பட்டது என பல கேள்விகள் கேட்டனர்.

இவ்வாரான நிகழ்வுகள் மூலம் மீண்டும் புலிகளின் செயற்பாடுகளை தூண்டுகின்றதாக அமையும் அதனால் இதனை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும் என உறுதியாக கூறினர் அதன் பின்னர் நான் கூறினேன் நாங்கள்  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் நாம் எமது உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வு செலுத்துவதற்கு தடை என்றால் நாங்கள் அதனை நினைவுகூற மாட்டோம் அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான எந்தவிதமான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யமாட்டோம் என அங்கு கூறியிருந்தேன் இதனைத்தான் நான் அன்று யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்கள் மூலம் கூறியிருந்தேன்.

அத்துடன் அவ்வாரான விடயங்கள் தொடர்பாக எந்த அரசியல்வாதிகளும் என்னை தொடர்பு கொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பாக நிகழ்வுகள் நடத்தக்கூடாது என அச்சுறுத்தப்பட்டமை சம்மந்தமாக யாரும் அரசிடம் கேள்வி எழுப்பவில்லை இவர்கள் வெறுமனே மாவீரர் நாள்கள் முள்ளிவாய்கால் தினம் ஆகியவற்றை வைத்து அரசியல் நடத்துவதற்கே உள்ளனர்.

அந்தவகையில் இன்று இலங்கை ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்வுல்லா நியமிக்கப்பட்டுள்ளார் இவர் ஒரு இனவாதம் பேசும் ஒரு நபர் இவர் கடந்த காலங்களில் நீதிபதியயே மாற்றியதாகவும் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பல இனவாத கருத்துக்களை முன்வைத்துள்ளார் இவ்வாரன ஒரு இனவாதிக்கு கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்து கொடுத்துள்ளோம் இதனை நாம் வன்மையான கண்டிக்கின்றோம்.

அத்துடன் எனது கட்சிரீதியான செயற்பாடுகளை முடக்குவதற்கென பல சக்திகள் உள்ள அதில் இங்கு உள்ள மக்கள் நலன் காப்பகம் ஒன்றாகும் அதில் புலத்தில் உள்ள நலன் எனப்படும் றெஜீயன் என்பவரது மேற்பார்வையிலேயே இயங்குகின்றது அவர்கள் என்ன செய்தாலும் சரி நாம் எமது மக்களுக்கான பணியை பயணத்தை மாற்றப்போவது இல்லை ஆதலால் எனது அரசியல் பயணம் வடகிழக்கு அண்டிய பகுதிகளில் நடைபெறுகின்றன அதனடிப்படையில் முதற்கட்டமாக வடக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் எதிர்வரும் 27.01.2019 ஆம் திகதி காலை எனது கட்சிக் காரியாலயத்தினை திறந்து வைக்கவுள்ளோம் அதற்கு பின்னர் கிழக்கிலும் காரியாலயங்கள் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்துள்ளோம் ஆகையினால் எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கில் உள்ள அனைத்து மன்னால் போராளிகள் மாவீரர் பெற்றோர்கள் ஊடகவியலாளர்கள் என பலரையும் அழைக்கின்றோம்.

அன்றைய தினம் நீலன் அறக்கட்டளையின் நிதியுதவியின் 50 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகளும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் கையளிக்க ஏற்பாடு செய்துள்ளோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வூடக சந்திப்பின் போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர் எஸ். சிவகுமார் எம். இராஜகுரு மைக்கள் பரணி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts