அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி அம்பாறை திருக்கோவிலில் கவணயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும்

அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த மாதம் 14 ஆம் திகதி முதல் 10 அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக சாகும்வரையலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டமானது இன்று வரையில் எதுவித தீர்வுமின்றி தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்கு மாவட்டங்களில் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் நடாத்தப்பட்டிருத்தன அந்தவகையில் அப்போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில்  13 ஆம் திகதி அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ வெட்டுக் குளத்துப் பிள்னையார் ஆலயத்தின் முன்பாக கவணயீர்ப்பு போராட்ட முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆரம்ப போராட்டமானது குறித்த திருக்கோவில் ஸ்ரீ வெட்டுக் குளத்துப் பிள்னையார் ஆலயத்தின் முன்பாக தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியினூடாக நடைபவணி வந்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாடையில் சென்று கவணயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.
இங்கு கலந்து கொண்டவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பாததைகள் ஏந்தியாவாறு கோசமிட்டுந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts