ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் மேல் மாகாணத்தில் வாழும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கற்பித்து தற்போது ஓய்வுபெற்றுள்ளஅதிபர்களையும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வொன்றினை அண்மையில் கொழும்பு – 3 கொள்ளுப்பிட்டியிலுள்ள குயீன்ஸ் கபேயில் ஒழுங்கு செய்திருந்தனர்.

கொழும்பிலுள்ள இக்கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்களையும்    அவர்களது குடும்பத்தினரினரையும் சந்தித்து அவர்கள்  நலன்களை விசாரித்ததுடன்   அவர்களுக்கு இலவச வைத்தியபரிசோதனையை மேற்கொண்டு , சுகாதார முறையில் சமைக்கப்பட்ட காலை உணவு பரிமாறப்பட்டு  பாராட்டி  பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவித்தனர்.

முன்னாள் அதிபர்களான கே.எல்.அபுபக்கர்லெவ்வை , ஏ.எம்.முஸ்தபா , திருமதி மர்ஜுனா ஏ காதர்  , முன்னாள் ஆசிரியரும் ஓய்வுபெற்ற கல்முனை வலய கல்விப் பணிப்பாளருமான மருதூர் ஏ மஜீட் ,  பகுதித்தலைவர்களான  ஏ.ஏ.பாவா , ஏ.எம்.ஜெமீல் , எம்.அஹமட்லெவ்வை , எம்.ஐ.ஜமால்தீன் , ஏ.எல்.பதுறுதீன் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களாகும்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் கடந்த வருடம் சர்வதேச ஆசிரியர்தினத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வாழும் இக்கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு இவ்வாறானநிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts