ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக ரத்து! கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் தெரிவிப்பு.

கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களம் ஆசிரியர்சமப்படுத்தலை மையமாகவைத்து மேற்கொள்ளப்பட்ட  வெளி வலய ஆசிரியர் இடமாற்றங்கள் உடனடியாக அமுலுக்குவரும்வகையில் தற்காலிகமாக ரத்துச்செய்யப்பட்டுள்ளன  என்று மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
 
குறித்த இடமாற்றம் நேற்று   (2)திங்கள்  முதல் அமுலுக்கு வந்தது. எனினும்   இது தற்காலிகமாக ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
 
எனவே அவரவர் பணியாற்றிய பழைய பாடசாலைகளில் அவர்கள் அடுத்த அறிவிப்புவரும்வரை  தொடர்ந்து பணியாற்றலாம் எனக்கூடப்பட்டுள்ளது.
 
இதன்போது ஏலவே வெளிவலய சேவையைப்பூர்த்தி  செய்த சிலஆசிரியர்களின் பெயர்கள் தவறுதலாக இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. மனிதசக்திக்கு அப்பால் கணணியின் செயற்பாடுகளில் ஏற்பட்ட இத்தவறுகள் மேன்முறையீட்டில் நிவர்த்திசெய்யப்பட்டன. என்னிடம் பலர் இதுபற்றிக்கேட்டனர்.வெளிவலய காலத்தைப் பூர்த்தி
செய்த அனைவருக்கும் இது விலக்களிக்கப்படும் என்றோம். அவர்களை மீண்டும் அனுப்புவதற்கு நாம் ஒருபோதும்தயாரில்லை. ஆனால் வெளிவலய சேவையை அரைகுறையாக முடித்தவர்கள் அடுத்தஅறிவித்தலில் செல்லவேண்டிவரும்.
 
 ஆசிரியர் தட்டுப்பாடு கூடுதலாக நிலவும் மட்டு.மேற்கு கல்குடா கிண்ணியா போன்ற வலயங்களுக்கு ஆசிரியர்களை அனுப்பவேண்டிய தேவை திணைக்களத்திற்கிருக்கிறது. அந்த மாணவர்களுக்கு கல்வியில்சமநீதி சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும்.புதிதாக ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்தில் இச்சமமின்மை பூரணமாக களையப்படவாய்ப்பிருக்கிறது என்றார்.

Related posts