இந்து சமய வாழ்வியல் நெறிமுறைகளை பாதுகாக்கும் தெய்வீக கிராம நிகழ்வு .வீரமுனை கிராமத்தில்.

இந்து சமய  வாழ்வியல் நெறிமுறைகளை பேணி பாதுகாக்கும் தெய்வீக கிராம நிகழ்வு வரலாற்று பிரசித்தி பெற்ற வீரமுனை கிராமத்தில் நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தெய்வீக கிராம நிகழ்வு (16) காலை 9 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இந்து சமயத்தவரின் கலாசார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் நோக்கோடும் ஏனைய மதங்களோடு ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கோடும் தெய்வீக கிராம் என்ற தொனிப்பொருளின் கீழ் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய காவடி ஆட்டம்,கோலாட்டம் ,மங்கள வாத்தியங்கள் முழங்க வீரமுனை வீதிவழியாக பிரதம அதிதியான வே.ஜெகதீஸன் மேலதிக அரசாங்க அதிபர் உட்பட்ட இந்துகுருமாரும் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர். 

ஆலய வளாகத்தினுள் குருபூசை ,கோமாதா பூசை,பிடியரிசி சேமிப்பு,வஸ்த்துதானம்,மரநடுகை போன்ற பாரம்பரிய இந்துக்களின் அன்றாட வாழ்கைமுறை பற்றி தற்கால மக்களுக்கு எடுத்தியம்பும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களும் இந்துகலாசார உத்தியோகஸ்த்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

?????????????
?????????????

Related posts