இன நல்லுறவினைக் கட்டியெழுப்பும் கவனயீர்ப்பு

(எம்.ஏ.றமீஸ்)
சர்வதேச சமாதான தினத்தினையொட்டி ‘நாம் இலங்கையர்’ என்ற தொனிப் பொருளின் கீழ் சர்வ மதங்களை பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நல்லிணக்க பொறிமுறைகளை கூட்டிணைப்பதற்கான செயலகத்தின் ஆலோசனைக்கமைவாக, தேசிய சமாதானப் பேரவையின் வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை சர்வமதக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான சகவாழ்வினை வலியுறுத்திய கவனயீர்ப்புப் பேரணியும் விஷேட ஒன்றுகூடல் நிகழ்வும் இன்று(22) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை சர்வ மதக் குழுவின் தலைவர் ஐ.எல்.ஹாசீம் தலைமையில் இடம்பெற்ற கவனயீர்;ப்புப் பேரணி அக்கரைப்பற்று மருதயடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது. அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டாரத்தினை அடைந்த இப்பேரணி அனைத்து இனத்தவர்களும் ஒன்றுபட்ட மனித சங்கிலியாகக் கைகோர்த்து தமது ஒற்றுமையினை வலியுறுத்திய கோஷங்களை எழுப்பினர்.
மதக்களுக்கடையில் நல்லுறவினைக் கட்டியெழுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியினைத் தொடர்ந்து அக்கரைப்பற்று நகரில் இருந்து அக்கரைப்பற்று மாநகர சபை வளாகம் வரை பேரணியாகச் சென்ற சர்வ மத பிரிதிநிதிகள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியில் நூற்றுக்கணக்கான சர்வமதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் அம்பாறை மாவட்ட இணையம் உள்ளிட்ட இந்து, இஸ்லாமிய, பௌத்த மற்றும் கிருஸ்தவ சமயத்தவர்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் இதற்கான ஒத்துழைப்புக்களை நல்கியிருந்தனர்.
அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட ஒன்றுகூடலின்போது மதங்களுக்கிடையல் நட்புறவான சூழலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், பன்மைத்துவம் மற்றும் நீதயின் இறையாண்மை ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள் சமய நல்லிணக்கங்களை நடைமுறைப்படுத்த அவசியமானதும் சுமூகமான சூழல் ஒன்றை உருவாக்குவதன் அவசியம் பற்றியும் இதன்போது சர்வ மத தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள இந்து இஸ்லாமிய, கிருஸ்தவர மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த சர்வ மதப் பெரியார்கள் பலர் இனத்போது கலந்து கொண்டனமை குறிப்பிடத்தக்கது.

Related posts