இலங்கையின் நீதி பொதுபலசேனா புத்தபிக்குவிடமா?

இலங்கை நாட்டு நீதித்துறையை அவமதிக்கும் செயலாகவே முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உயிர் நீத்த புத்தபிக்குவின் உடலம் தகனம் செய்த சம்மவம் விடயம் கோடிட்டு காட்டுகிறது நாட்டில் பொதுபல சேனா புத்தபிக்குவா பிரதம தீதிபதி என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பொதுபலசேனா புத்தபிக்கு குழுவினர் இறந்த புத்தபிக்குவின் உடலை அத்துமீறி ஆலய வளாக எல்லைக்குள் தகனம் செய்தமை தொடர்பாக பா.அரியநேத்திரன் மேலும் கருத்து கூறுகையில்.

இலங்கையின் நீதித்துறை அண்மைக்காலமாக சிறப்பாக பக்கசார்பற்றதாக இயங்கிவரும் நிலையில் மீண்டும் அதை கலங்கப்படுத்தும் விதமாக பொதுபலசேனா புத்த பிக்கு வண கலக்கொட ஞானசாரதேர்ரும் அவரின் சகாக்களும் நடந்து கொண்ட விதம் பௌத்தமதத்துக்கும் இலங்கை தீதித்துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்தப்பட்ட பொதுபலசேனா செயலாளர் சானசாரதேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறையில் வைக்கப்பட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறுசேனா அவரை தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கி இருந்தார் இப்போது மீண்டும் நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்துள்ளார் இதற்கு ஜனாதிபதி என்ற சொல்லப்போகிறார்.

சட்டம் தீர்ப்பு நீதி எல்லாமே இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று ஆனால் காலம் காலமாக பௌத்த மத குருமார்கள் இலங்கை சட்டத்தை கணக்கெடுப்பதில்லை புத்தபகவான் போதனை ஒழுக்கம் தர்மம அகிம்சை என்றுதான் சொல்லப்படுகிறது இலங்பையில் தர்மம் அதர்மமாகவும் ஒழுக்கம் காட்டுதர்பாகாவும் அகிம்சை அடாவடியாகவும் பௌத்த தேவர்களால் கடைப்பிடிப்பதாகவே இந்த சம்மபவம் நிருபித்துள்ளது.

தமிழ் சட்டத்தரணிகளுக்கு தமிழர் தாயகம் பகுதிகளிலேயே பாதுகாப்பு இல்லாத நிலை பொதுபலசேனா எனும் கூட்டத்தால் நிருபணமாகியுள்ளது இது கண்டிக்கவேண்டிய செயலாகும்.

இலங்கையில் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் இவ்வாறான பௌத்த துறவிகளின் செயல் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை நீதியும் இல்லை என்பதை மீண்டும் நிருபித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களில் சிலர் இந்த செயலுக்கு பின்னணியில் உள்ளனரா என்ற சந்தேகம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ளது.

எனவே நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த துறவிகளுக்கும் தமிழ் சட்டத்தரணிகளை தாக்கிய சிங்கள குண்டர்களுக்கும் சட்டநடவடிக்கை உடனடியாக எடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதேவேளை நீதிமன்ற தீர்ப்பை மீறி இறந்த புத்த பிக்குவின் உடல் தகனம் செய்த போது பொலிசார் அதை தடுக்காமல் வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்த சம்மவம் தமிழர்களுக்கு ஒருநீதி சிங்களவர்களுக்கு இன்னொரு நீதி என்பது போலீசாரின் செயல் துல்லியமாக காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான கசப்புணர்வான புறக்கணிப்பு சம்பவங்களே கடந்த கால ஆயுதப்போராட்டத்துக்கு தமிழ் இளைஞர்களை தூண்டியது என்பதையும் இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேசமும் உணர்ந்துகொள்ள வேண்டும் என மேலும் பா.அரியநேத்திரன் கூறினார்.   

Related posts