ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமைக்கு அங்கஜன் கண்டனம்!

உண்மைகளை நிலை நாட்டுவதும், இலங்கை நாட்டின் ஜனநாயக பரப்பை நிலை நிறுத்துவதும் நம் அனைவரினதும் அர்ப்பணிப்புடன் கூடிய பொறுப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் ”கருத்துக்களை மக்களிடத்தே இணைக்கும் ஊடகவியலாளர்களை மாற்றுக்கண்களால் உற்று நோக்குவதும்,தாக்குவதும் பாரம்பரியமான ஊடாக நெறிமுறையான பத்திரிக்கைகள், துண்டுபிரசுரங்கள் மற்றும்,சுவரொட்டிகள் போன்றவை மக்களிடத்தே இன்றும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இவ்வாறு வழங்குனர்களாக செயற்படுபவர்களை மோசமான முறையில் தாக்குவது ஏற்புடையது அல்ல.பேனா ஓர் நிராயுதமுனை,அவற்றை ஆயுத முறை கொண்டு செயற்படுபவர்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும்.

கருத்துணர்வை பக்கசார்பின்றி புரிந்துணரும் தன்மையை ஜனநாயக நாட்டில் வளர்க்கவேண்டும்.நாட்டின் நலனுக்காகவும் ஜனநாயக உரிமையை மக்கள்

பெற்றுக்கொள்வதர்க்காகவும் அனைவரினதும் அர்ப்பணிப்பான சமத்துவத்துடன் கூடிய ஒத்துழைப்பு இந்த நாட்டிற்கு கிடைக்க பெறவேண்டும்.
ஆரோக்கியமான செயற்பாடுகளை நாட்டுக்காக வழங்குபவர்களை அடக்குவது இல்லை, அடக்க முற்படுவது விரோதமானது. முரண்பாடுகளின்றிய சமத்துவமான உடன்பாடுகளே உரித்துக்களை பெற்றுத்தரும்.நாட்டு மக்களின் நம்பிக்கையும் அதுவாகவே காணப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts