ஊடக ஒழுக்கமுறையில் பயணித்தால் இளைஞர்களின் மன நலத்தைப் பாதிக்கும்

பாறுக் ஷிஹான்-
FAROOK SIHAN
 
ஊடக ஒழுக்கமுறையில் பயணித்தால்  இளைஞர்களின் மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இருந்து விடுபட முடியும் என  KBK ஊடக வலையமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்   ஐ.எல்.எம். நாஸிம்  தெரிவித்தார்.
 
அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மாணவர்களுக்கான  ஊடக  இலவச   செயலமர்வு சனிக்கிழமை(14) சம்மாந்துறை அல் அர்ஷத் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.
 
மேலும் தனது கருத்தில் 
 
இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்  சம்பவங்கள் ஊடக ஒழுக்கமின்மை காரணமாக தொடர்கின்றதாக அமைப்பு ஒன்று  நடாத்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது.
14-24 வயதிற்குட்பட்ட 1 479 பேரிடம்   ஊடகங்களில்  எது  எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடுமாறு அந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் போதே குறிப்பிட்ட இளைஞர்களின் கருத்துப்படி ஊடக ஒழுக்கவியல் இன்மையினால் மனஅழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.எனவே இதனை எதிர்வரும் காலங்களில் நாம் கவனமெடுத்து முன்னெடுக்க வேண்டும் என தனது தலைமை உரையில் கேட்டுக்கொண்டார்.
 
கும்பகந்துர ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வானது    கிராஆத்  , தேசிய கீதம் ,வரவேற்புரை,  கருத்தரங்கு ,சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நன்றியுரை , என நிறைவடைந்தது
 
இதில்   KBK MEDIA  வின் செய்தி ஆசிரியரும்  விடிவு சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியரும் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் இதழியல்துறையில் பட்டம் பெற்றவரும் ஊடகதுறையில் பல கற்கைநேறியை பூர்த்தி செய்தவரும் ஊடக செயலமர்வின் விரிவுரையாளருமான ஊடகவியளாளருமான அனாஸ். எம். அனீஷினால் ஊடக மாணவர்களுக்கான செயலமர்வு விரிவுரைகள் நடாத்தப்பட்டன.மேலும் இந்த நிகழ்வில் அம்பாறை  மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊடக கற்கை மாணவர்கள் பங்குபற்றியதுடன் ஊடக ஒழுக்கவியல்  ஊடக தர்மம்  ஊடகத்தின் போக்கு என்பனபற்றி விரிவான விரிவுரைகள் இடம்பெற்றது.

Related posts