எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கமைய, எதிர்க்கட்சித் தலைவராக  சபாநாயகர் கரு ஜயசூரிய (18), சபையில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் அதிக ஆசனத்தை கொண்டுள்ள கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கியுள்ளதாக, சபாநாயகர்  குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு, சபையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழத் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ சுமந்திரன் இதற்கு கடும் எதிர்ப்பை ​வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி  மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது கூட்டமைப்பு.

Related posts