எதிர்வரும் சில மாதங்களில் மேலும் ஆசிரியர் நியமனங்கள்- கல்வி அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் சகல அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதுவரையில் 4000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர் நியமனங்கள் எதிர்வரும் சில மாதங்களில் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று அமைச்சர் உரையாற்றினார்.

தற்பொழுது நாட்டில் எந்தவித அபிவிருத்தியோ அல்லது அரச ஊழியர்களின் நலனிலோ அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என எதிர்கட்சியினர் சிலர் விமர்சித்தனர் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன என்றும் அவர் சுட்டிகாட்டினார். கல்வி துறையில் இதுவரையில் 3000 விஞ்ஞான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
பாடசாலைகளில் 90 சதவீதமானவற்றுக்கு மின்சார வசதிகள் மற்றும் பொது வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். பொதுமக்களின் நலனுக்காக புதிய சட்டமூலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எந்தவித அரசியல் அழுத்தங்களும் இன்றி ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.

பெண்களுக்கு போதுமான வசதிகளை வழங்க அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக அமைச்சர் சந்திராணி பண்டாரதெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்கள் ஆவர். பெண் தொழில் படையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அபிவிருத்தி பணிகளை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தனிநபர் கடன் சுமை வரவு செலவுத்திட்டத்தினால் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நுண்கடன் திட்டம் ஆபத்தானது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளார்கள் என்று அவர் கூறினார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளவை என்ன? இந்த பிரதேசத்திலேயே மக்கள் அதிகளவில் நுண்கடன்களை பெற்றுள்ளனர். 2017ஆம் ஆண்டில் மாத்திரம் 263 பில்லியன் ரூபா 39 நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 25 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். இதனால் நுண்கடன் தொடர்பில் நிதி வழங்குவது நிறுத்தப்படவேண்டும் என்று ஜ.நா.ச வலியுறுத்தி இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பை ஆதரிக்க இம்முறை வரவு செலவுத்திட்டம் பெரிதும் உதவியுள்ளது. இனவாதத்தை பரப்பி நாட்டை அழிவுக்குள்ளாக்க இடமளிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கியுள்ளது. உலகில் கூடுதலான வரியை அறவிடும் நாடு இலங்கை என விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது எனவும் குற்றம் சாட்டினார்.

நாட்டில் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக அரச சேவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட நவீன் திசாநாயக்க தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு என இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் 778 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. குறைவின்றி நிவாரணங்களை வழங்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் 113 இலக்கத்தை சரியாக எண்ணிக்கொள்ள முடியாதவர்களே நூல் எழுதி வெளியிட்டு வருகின்றனர். உண்மையை தெளிவாக்கி கொள்வதில் இவர்களுக்கு சிந்தனை கிடையாது. 

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உரையாற்றுகையில் நாட்டின் நிலைமை இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காதவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று தெரிவித்தார். எமது பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் நன்மை கிடைத்துள்ளது. இதற்கு உதவிய அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பது அவசியம் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வலியுறுத்தினார். சீன அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தகத்தினால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் சந்தை பொருளாதாரம் மீது கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படுவது எந்தவொரு தனி நபரும் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வாய்பலிக்காது சாதாரண மக்களை வலுவூட்டி வறுமையிலுள்ள மக்களை மேம்படுத்தவும் வரவு செலவுத்திட்டதில் முன்மொழிவு இடம்பெற்றுள்ளன. இது ஜ.தே.கட்சியின் இறுதி வரவு செலவுத்திட்டமல்ல மேலும் பல வரவு செலவுத்திட்டங்களை நாம் சமர்பிப்போம். விவசாயிகள் மீனவர்கள் கைதொழிலில் ஈடுபட்டுள்ளளோர் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட அபிவிருத்தியில் அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டுவதாக அமைச்சரவைஅந்தஸ்தற்ற அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று நுவரெலியா மாவட்டம் முழுவதிலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாகின்றன. போதைப் பொருளை ஒழித்துக் கட்டுவதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளுக்குஉதவியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் உரையாற்றினார். தமது உறவுகள்காணாமல் போயுள்ள குடும்பங்களுக்காக கொடுப்பனவை வழங்க நடவடிக்கைஎடுத்திருப்பது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

ஏற்றுமதியை அதிகரித்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல்லா பண்டாரிகொட தெரிவித்தார். இதற்காக என்டர்பிரைஸ்ஸ்ரீலங்கா திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐயாயிரம் ஏற்றுமதிக் கிராமங்கள்அமைக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

சிறிய அளவிலான வாகனங்களின் விலைகளைக் குறைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரதெரிவித்தார். அரசாங்கம் எவ்வாறு வருமானத்தை அதிகரிக்கப்போகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டு நாடகங்களை இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புவதன்மூலம் பல சமூக நெருக்கடிகள் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லசந்தஅழகியவன்ன குறிப்பிட்டார்.

ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து அரச ஊழியர்களின்சம்பளத்தை அதிகரித்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்ரம கூறினார்.

Related posts