எமது தமிழர் கலாச்சாரத்தை நாங்களே மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இராஜராஜ சோழன் கால்பதித்த இடமெல்லாம் எமது தமிழர் கலாச்சாரம் இன்றும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் அதனை மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் தற்போது எமது மாநகரசபையின் செயற்பாடுகளில் ஒன்றாக எமது கலை கலாச்சாரங்கள் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியாக பௌர்ணமி கலை விழாவினை மேற்கொண்டு வருகின்றோம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொங்கல் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல நாடுகளில் எமது கலாச்சாரம் இருக்கின்றது ஆனால் அது வௌ;வேறு வடிவங்களில் பிரதிபலிக்கின்றது. எமது மொழி சுமார் 13 நாடுகளில் பிரதிபலிக்கின்றது. இராஜராஜ சோழன் கால் பதித்த இடமெல்லாம் எமது தமிழர் கலாச்சாரம் இன்றும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் அதனை மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எமது மாநகரசபையில் எமது செயற்பாடுகளில் ஒன்றாக எமது கலை கலாச்சாரங்கள் புத்துயிர் பெற வேண்டும் என்ற வகையில் விசேடமாக ஒரு நிலையியற் குழுவினை அமைத்து நலிவடைந்து சோர்ந்து இருக்கின்ற எமது கலாச்சாரத்தை வளப்படுத்தி எமது எதிர்காலச் சந்ததிக்கு வழங்குவதற்கான ஒரு செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றோம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பௌர்ணமி கலை வழிவினை நடாத்துகின்றோம். ஆரம்பித்தில் எமக்கு நிகழ்வுகளை எடுப்பதற்கு கஷ்டமாக இருந்தது. தற்போது நிழ்வுகளைத் தெரிவு செய்வதற்குக் கஷ்டமாக இருக்கின்றது. அந்தளவிற்கு நிகழ்வுகள் எம்மை நோக்கி வருகின்றன. எமது கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

எமது மட்டக்களப்பு நகரை ஒரு சிமார்ட் நகரமாக மாற்றுவதற்காக அண்மையில் ஒரு செயற்பாட்டை மேற்கொண்டுள்ளோம். தகவல் தொழிநுட்ப அறிவு கொண்ட ஒரு இளைஞர் குழாம் இதற்காக எம்முடன் இணைந்துள்ளார்கள். மாநகரசைபக்குட்பட்ட பிரச்சனைகளை மக்கள் மாநகர முதல்வருக்கு அறியப்படுத்தவதற்காக ‘டெல் டு மேயர்’ எனும் செயற்திட்டத்தையும் அமுல்ப்படுத்தியிருக்கின்றோம்.

இவ்வாறு ஒரு புறம் எமது கலை கலாச்சாரத்துடன் சேர்ந்து எமது நகரத்தையும் செழிப்படையச் செய்யும் வேலைப்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.

Related posts