எருவில் கிராமத்தில் களைகட்டிய சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்

எருவில் கலைக்கமல் கலாமன்றமும் எருவிலுர் இன்டிபென்டன் விளையாட்டுக்கழகமும் எருவில் வடக்கு இளைஞர்கழகமும் இணைந்து நடாத்திய சிறுவர் முதியோர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் முக்கழகங்களின் இணைப்பாளர் திரு.கு.சசிகுமார் தலைமையில் 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30 மணியனவில் எருவில் கண்ணகி அம்மன் ஆலயவெளி வளாகத்தில் இடம்பெற்றது.

 இந்த நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சிவ ஸ்ரீ க.மோகன் குருக்கள் பிரதம அதிதியாக மண்முனை தென்எருவில் பற்றுப பிரதேசசபை தவிசாளர் திரு.ஞா.யோகநாதன் மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலைகள் செயலாற்றுப்பணிப்பாளர் திரு.ச.சசிகரன்; சிறப்பு அதிதிகளாக மண்முனை தென்எருவில் பற்றுப பிரதேசசபை உறுப்பினர்களான திரு.சி.காண்டீபன் மற்றும் திருமதி இ.வினோதினி பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பகல்வி பிரிவு உதவிகல்வி பணிப்பாளர் திரு.பா. வரதராஜன், எருவில் கண்ணகி மகாவித்தியாலய அதிபர் திரு.சா. பரமானந்தம், எருவில் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.மா. சுந்தரலிங்கம்,எருவில் கண்ணகி மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.இ.ஜீவராஜ் ஆசிரியர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகம் சார்பில் விளையாட்டு உத்தியோகத்தர் திரு.ஏ.அனுஸ்குமார், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் திரு.இ.கருணாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 மன்றங்கள் சங்கங்கள் ஆலயங்கள் அமைப்புக்கள் பிரநிதிகள் இந்நிகழ்வில் எருவில் கிராமத்தில் ஜந்து பாலர்பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியதுடன் அவர்களுக்கு மகிழச்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுக்கள் ஓழுங்கு செய்து நடாத்தப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது அத்துடன் எருவில் கிராமத்திற்கு வளம் சேர்த்த முதியோர்களும் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் சிறுவர் மற்றும் முதியோருக்கான கௌரவித்தல் நிகழ்வின் அனுசரணையினை எருவில் கிராமத்தினை சேர்ந்த சமூகசேவகர் அ.வசிகரன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்

Related posts