ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபைக்கான புதிய தவிசாளராக சி.சர்வானந்தம் இன்று(18) தெரிவு செய்யப்பட்டு குறித்த பிரதேச சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

2018ஆம் ஆண்டு பிரதேச சபை வட்டார தேர்தலில் வெற்றி பெற்ற 31 உறுப்பினர்களுடன் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அ.பேரின்பம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளரானார்.

அதன்பின்னர் கடந்த 3வருடம் சுதந்திர கட்சியின் ஆட்சியிலுள்ள நிலையில் இந்த வருடம் 2021ல் இடம்பெற்ற வரவுசெலவு திட்டத்தின் பின் புதிய தவிசாளருக்காக இரண்டு கட்சி உறுப்பினர்கள் போட்டியிட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 17வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 11வாக்குகளை பெற்று தோல்வியடைந்ததுள்ளது. இத்துடன் 2 வாக்குகள் நடுநிலை வாக்குகளாக அளிக்கப்பட்டன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சி.சர்வானந்தம் 17வாக்குகளை பெற்று வெற்றியடைந்து ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபைக்கு புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேந்திரன்,ஞா.ஸ்ரீநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,சபைச் செயலாளர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts