ஓய்வு பெறும் சீனித்தம்பி-சந்திரகுமாரி அவர்கள் பண்மைத்துவ ஆளுமை மிக்க ஆசிரியர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஓந்தாச்சி மடம் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய செல்வி சீனித்தம்பி-சந்திரகுமாரி தனது 26 வருட ஆசிரியர் சேவையில் இருந்து 23.07.2019 அன்று தொடக்கம் பணிநிறைவு கண்டுள்ளார்.

மட்டக்ளப்பு களுதாவளையில் பிறந்த இவர் மட்/பட்/களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைக கற்று இடைநிலைக்கல்வியையும் க.பொ.த உயர்தரத்தினையும் களுதாவளை தேசியபாடசாலையில் நிறைவு செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுகலைமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

1993 இல் பட்டதாரி ஆசிரியராக முதல் நியமனத்தைப் பெற்று தனது கல்விக்கான் கன்னிப் பணியினை மட்/பட்/மகிழுர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தொடங்கி 11 வருடங்கள் சேவையாற்றினர் இக்காலபகுதியில் இலங்கை  திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.பின்னர் 2004ஆம் ஆண்டு இடம்மாற்றம் பெற்று மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாவயத்தில் 12 வருடங்கள் சேவையினை நிறைவு செய்துள்ளார்.

இவரின் சேவைக்காலத்தில் தமிழ்,சமயம்,இந்துநாகரிகம்,ஆகியபாடங்களில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அயராது உழைத்த ஒருவராவர்.

சமூகப்பணி/ சமயப்பணி,கல்விப்பணி ஆகிய பணிகளுக்கு தன்னை அற்பணித்து நிற்கும் அதிபர் திரு.சீ.கந்தசாமி அவர்கள் தொழிற்கடமை/சமூகக்கடமைஇ  வெற்றி பெற்ற ஒருவராகவே மிளிர்கின்றார்.

இன்று மட்/பட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் தனது வேவைக்காலத்தின் இறுதிப்பணியினை நிறைவுசெய்து 26 வருட சேவையின் பின் பணிநிறைவு கண்டு ஓய்வு பெற்று சென்றுள்ளார்.

Related posts