கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் அபிவிருத்தி,கிழக்கின் அபிவிருத்தி போன்று சிந்தித்தால் நாடு முன்னேற்றம் காணும்

(க. விஜயரெத்தினம்)
கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் அபிவிருத்தி,கிழக்கின் அபிவிருத்தி போன்று சிந்தித்தால் நாடு முன்னேற்றம் காணும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
 

மட்டக்களப்பு நகரிலில் ஆறரை கோடி ரூபா செலவில்  தனியார் பேரூந்து நிலைய புதிய கட்டிடதொகுதி இன்று(12)காலை 10.00 மணியளவில் மேல்மாகாண  அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரை  அழகுபடுத்தும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் விசேட திட்டத்திற்கமைய  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால்   மட்டக்களப்பு நகரிலில் சுமார் 68 இலட்சம் ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்ட தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டிடதொகுதி இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் வசதிகளின்றி பல்வேறு அசௌகாரியங்களுக்கு மத்தியில் செயல்பட்டுவந்த இத்தனியார் பேரூந்து நிலையத்தின் தேவை உணரப்பட்டு பிரதமர்  ரணில்விக்ரமசிங்க விடுத்த  விசேட பணிப்புரைக்கமைய   மாநகர மற்றும் மேல்மாகாண  அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின்அங்கீகாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் புதிய கட்டிடதொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சின் செயலாளர்,மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்,
திணைக்களத்தலைவர்கள்,மதத்தலைவர்கள்,ஐக்கிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

கிழக்கு மாகாணமானது இன்று பார்வையற்ற நிலையில் மோசமாகவும்,அபிவிருத்தி அடையாமலும் இருந்து வருகின்றது.இந்த நிலையில் கிழக்கு மாகாணம் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.அதற்கு காரணம் இன்று மேல் மாகாணத்தின் அபிவிருத்தியாகும்.மேல்மாகாண அபிவிருத்தி போன்று கிழக்கு மாகாணமும் அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாகும்.

இன்று நாட்டைச்சூழவுள்ள  கடற்பகுதியில் அமையப்பெற்ற  துறைமுக அபிவிருத்தியாகும். இலங்கையை அண்மித்த பல நாடுகள் மிக விரைவாக அபிவிருத்தி அடைந்து வருகின்றன.பங்களாதேஷ், சீனா,மியான்மர்,கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகள் அபிவிருத்தியடைந்து வருகின்ற.இவை அனைத்துமே இந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் அண்மித்துள்ள நாடுகளாகும்.இதற்கு முக்கிய காரணம் துறைமுகமும் அதே போன்று விமான நிலையமும் ஆகும்.சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணித்து அதனூடாக டாக்கா நகரம் போன்ற நகரங்களை ஆரம்பித்தால் கிழக்கு மாகாணம் முழுமையான  அபிவிருத்தியடையும்.கிழக்கு மாகாணம் முழுமையாக அடைய வேண்டுமென்று என்னுடைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

இந்த கிழக்குப் பிரதேசம் மிகவும் வன்மையாக பாதிக்கப்பட்டது.அதேபோன்று ஒரு சம்பவமாகவே இதனை எடுத்து செல்வோம்.ஆகவே கடந்தகால கசப்பான அனுபவங்கள் உங்கள் மனதில் இருக்கும்.கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் அபிவிருத்தி,கிழக்கின் அபிவிருத்தி போன்று சிந்தித்தால் நாடு முன்னேற்றம் காணும்.கிழக்கு மாகாணத்தில் நகரசபை மண்டபம் ஒன்றையும்,அதேபோன்று பஸ்தரிப்பு நிலையம் ஒன்றையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அன்று தீர்மானித்தோம்.அன்றைய எண்ணம்போல்  இப்பொழுது அனைத்து வேலைகளையும் நாங்கள் முடித்து இருக்கின்றோம்.அன்று வேண்டுகோள் விடுத்ததை போன்று இந்த நகரத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் நகரத்தை பஸ்தரிப்பு நிலையம் அமைத்து அபிவிருத்தி செய்து கொடுத்துள்ளோம்.

எனக்கு ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் விடுதலை வழியைச் சொல்லித் தந்தார்.அது எனக்கு ஞாபகமில்லை.அதன் கருத்து என்னவென்றால் கடலில் இருக்கும் உப்புநீரும்,அதே போன்று மலையில் இருக்கும் எலுமிச்சையும் சேர்ந்தால் சிறப்பான உணவாகத்தான் இருக்கும்.

ஊறுகாய் நல்ல ஒரு சுவையான உணவு என்று உங்களுக்குத் தெரியும்.அதே போல் நாட்டில் இருக்கும் சிங்களவர்களும்,தமிழர்களும் இணைந்து வாழ்ந்தால் நாட்டிறேகு ஒற்றுமையும்,பலமும் அதிகரிக்கும்.அதாவது மலைப் பகுதியில் இருக்கும் நதியானது ஊடறுத்து   கரையோரத்தில் இருக்கும் கடலோடு கலக்கும்.அதேபோன்று அர்த்தம் தரும் ஒன்றாக தமிழர்களும்,சிங்களவர்களும் இணைந்தால் ஒரு நல்ல அபிவிருத்தி அடைந்த ஒரு தாய் நாட்டை இலங்கை எனும் நாமத்தில் உருவாக்க முடியும்.இதன்மூலம் நாம் அனைவரும் இலைங்கையர்களாக வாழமுடியும் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

Related posts