கடமைநேரத்தில் தாதியர்மீது தாக்குதல்; மன்னிப்பின் பின் விடுதலை!

 
கடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
 
குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி  தாக்கியதாகக்கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது.
 
 வைத்தியசாலைநிருவாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் கல்முனைப்பொலிசார் உடனடியாக விரைந்து பிரஸ்தாப நபரை கைதுசெய்து தடுத்துவைத்தனர்.
எனினும் அந்த நபர் மன்னிப்புக்கோருவதாகத் தெரிவித்ததையடுத்து குறித்த தாதியஉத்தியோகத்தரும் அதனை ஏற்றதனால் அவரை வைத்தியசாலைக்குக்கொணர்ந்து அனைத்து தாதியஉத்தியோகத்தர்களின்முன்னிலையில் பகிரங்க மன்னிப்புக் கேட்டதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Related posts