கனகராயன்குளம் சம்பவம்: பொலிஸ்மா அதிபருக்கு செல்வம் அடைக்கலநாதன் கடிதம்!

கனகராயன்குளம் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கேரி நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்லம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளம் சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபருக்கு  (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கனகராயன்குளம் பிரதேசத்தில் முன்னாள் போராளியின் குடும்பம் தாக்கப்பட்டமை குறித்து உடனடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட பொலிஸாரின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிணக்கு ஒன்றினை விசாரிக்க சிவில் உடையில் சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மிகவும் மிலேச்சத்தனமாக பொலிஸ் ஒழுக்க நெறிகளை மீறி ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களையும் தாக்கியுள்ளனர்.

சம்பவம் பொலிஸாரின் சட்டம் ஒழுங்கு பேணும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் திசை மாறிச் செல்வதையே உணர்த்தி நிற்கின்றது.

இந்தச் சம்பவத்தினால் மக்கள் பொலிஸார் மீது அவநம்பிக்கையை கொண்டிருப்பதுடன் பயமும், பீதியும் நிறைந்த சூழலையும் உருவாக்கியிருக்கின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பாக விஷேட விசாரணைக் குழுவினை அமைத்து பூரண விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts