கம்பெரலிய திட்டத்தின்கீழ் மண்முனை தென்எருவில் பற்றுஇ பிரதேச செயலக பிரிவில் 15 திட்டங்களுகான அடிக்கல் நாட்டும் நிகழ்வு



அண்மையில் நாடலாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் கம்பெரெலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 55.2 மில்லியன் ரூபா மண்முனை தென்எருவில் பற்றுஇ செயலகப்பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமயில் நடைபெற்றது.

வீதிகள் கொங்கிறீட் இடல்இபாடசாலை பொதுமைதானங்கள் புனரமைப்புஇமற்றும் ஆலயங்கள் புனரமைப்பு என மொத்தமாக 15 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் மற்றும் புனரமைப்பு வேலைகளை தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள ஆலய உறுப்பினர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுதாபனத்தின் தலைவரும் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான சோ.கணேசமூர்தி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவப்பரியா வில்வரெத்தினம்இஉதவிப் பிரதேச செயலாளர் தரணிதரன் சத்தியகௌரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இகிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்இ ஆலயத்தலைவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக கம்பெரலிய திட்டம் பற்றி சமூகமட்ட அமைப்புக்களுடனான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் சிவப்பிரியா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி மற்றும் உதவி திட்டமிடல பணிப்பாளர் சுதாகரன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



Related posts