கல்முனைப்பிராந்திய கொரோனாத்தொற்றுக்கள் 900ஜத் தாண்டியது!<அக்கரைப்பற்று 309:கல்முனை தெற்கு 211:பொத்துவில்

கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 900ஜத் தாண்டியது.கல்முனைப்பிராந்தியத்தில் 903ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன என கல்முனை சுகாதாரப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
 
இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை  863பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
அதில் அக்கரைப்பற்று 309 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 211 பொத்துவில் 77 அட்டாளைச்சேனை 88 சாய்ந்தமருது 54 ஆலையடிவேம்பு 36 இறக்காமம் 24 சம்மாந்துறை 27 கல்முனைவடக்கு 17 திருக்கோவில் 15 நிந்தவுர் 13 காரைதீவு 14 நாவிதன்வெளி 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
 
கல்முனை மாநகரில் 282
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 282 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது.
கல்முனை தெற்கில் 211பேரும் சாய்ந்தமருதில் 54பேரும் கல்முனை வடக்கில் 17பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 09வது நாளாக அமுலில்உள்ளது.
அங்கு இதுவரை 21543 கொரோனாப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தனிமைப்படுத்தலில் 206பேர்வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6மரணங்கள் சம்பவித்துள்ளதாக பணிப்பாளர் சுகுணன் மேலும் தெரிவித்தார்.

Related posts