கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தமிழர்களின் அடையாளத்தை பறைசாற்றியவர் -லவநாதன்

முன்னால்கல்முனை பிரதேச செயலக செயலாளர் திருவாளர் லவநாதன் நேற்று  இறைவனடி சேர்ந்தார்

– எனது இளமைக்கால நினைவாகவும் நட்பாகவும் இன்று வரை மறக்க முடியாதவர்  அண்ணன் லவநாதன் அவர்கள்.என கல்முனை மாநகர சபை உறுப்பினர்  சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்
அவர் மேலும் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்
 
உண்மையில் இன்று கல்முனையில் தமிழரின் அடையாளத்தை பதித்துச்சென்றவர் அண்ணன் லவநாதன் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
 
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தமிழர்களின் அடையாளத்தை பறைசாற்றி நிற்கின்ற பிள்ளையார் ஆலையம் இவரின் அளப்பரிய சமூக சமயப்பற்றை பறைசாற்றுகிறது.
சமூக சேவையிலும் சரி,ஆலய விவகாரங்கள் மற்றும் ஆலய நூல்வெளியீடுகள் மற்றும் ஆலைய வரலாறுகளை பேணிப்பாதுகாப்பதிலும் அண்ணனின் சேவை மகத்தானது. நூல்வெளியீடுகளிலும்  விளையாட்டு நிகழ்வுகளிலும் இளைஞர்களையும் கல்முனை பொதுஅமைப்புகளையும் ஊக்கப்படுத்தி தனதுஉச்சக்கட்ட சேவையை தனது இறுதிமூச்சுவரை செய்து முடித்திருக்கிறார்.
 
குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலையின்பொருளாதார இடவசதிகளின் தேவைக்காக சுமார் இரண்டரை ஏக்கர் காணியை பெற்றுக்கொடுத்த மகான் அண்ணன் லவநாதன் ஆவார்.
 
ஆனால் துரதிஷ்டவசமாக இன்று மீளா பயணத்தில் நம் முன்னோர்களோடு இணைந்துகொண்டார் அண்ணன் லவநாதன் அவர்கள்.
 
 
 
கல்முனை மாநகரசபை உறுப்பினர்
சந்திரசேகரம் ராஜன்
 
 

Related posts