கல்வியிலே தமிழ்ச் சமூகத்தினை கட்டியெழுப்பும் நோக்குடனே சுவிஸ் உதயம் அமைப்பு செயற்படுகிறது-அம்பலவாணர் ராஜன்

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினால் முப்பதுவருடங்களாக பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகளை கட்டியெழுப்பும் நோக்குடனே சுவிஸ் உதயம் அமைப்பு செயற்பட்டுவருகிறதே தவிர எந்த அரசியல் நோக்கத்திற்காகவும்  செயற்படவில்லை அத்தோடு ஒரு இனத்தின் முதுகெலும்பாக இருப்பது கல்வியே என்பதை உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும்  என இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள சுவிஸ் உதயத்தின பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் தெரிவித்தார்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை  மணவர்களுக்கும் அங்கு கற்பிக்கின்ற ஆசிரியருக்கும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் உதவி வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் எஸ்.கலைக்குமார் தலைமையில் 22 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை தங்கவேலாயுதபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .

இதன்போது அப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும்,மாலைநேர வகுப்பில்  கற்பிக்கும் ஆசிரியைக்கு மாதாந்தக் கொடுப்பனவும் அத்தோடு  துவிச்சக்கரவண்டியும் வழங்கிவைக்கப்பட்டது. 

இதில் ; சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் ,உபதலைவர் உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.வரதராஜன், பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,கணக்குப்பரிசோதகர் எஸ்.நகேந்திரன்,உபசெயலாளர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அதேவேளை இவ் உதவிகளை வழங்கிய சுவிஸ் உதயத்தின் செயற்குழுவிற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

அவர் மேலும் பேசுகையில் சுவிஸ் உதயம் அமைப்பு சுவிஸ் நாட்டில் கிழக்குமாகாண மக்குளுக்கு உதவும் நல்லநோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு கல்வி,பொருளாதாரம்,வாழ்வாதரம் போன்ற உதவிகளை பாதிக்கப்பட்டமக்களுக்குச் செய்துகொண்டு வருகின்றது 

குறிப்பாக நாட்டில் ஏற்பட்ட யுத்தசூழ்நிலையினால் தமிழ்ச்சமூகம் அனைத்தையும் இழந்து பலவழிகளாலும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் அவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்துகொண்டுவருகின்றோம்.

கல்வி என்பது ஒரு இனத்தின் இருப்பைப் பாதுகாப்பது இதற்காக எங்கள் அமைப்பின் கவனம் கூடுதலாக கல்விக்குத் திரும்பியுள்ளது  அதாவது பல்பலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு அவர்களது கல்வி நடவடிக்கை முடியும் வரை நாம் உதவிக்கொண்டுவருகின்றோம் இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முப்பது இலட்சத்துக்கு மேலான நிதி செலவுசெய்யப்படுகிறது. இதன் நோக்கம் பாதிக்கப்பட்டு இருக்கும் எமது சமூகத்தினை கல்வியில் முன்நேற்றவேண்டும் என்பதற்காகவே நாம் செய்து வருகின்றோம் இவ்வாறு அனைவரும் முன்வந்து சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டிய தேவை இருக்கின்றது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று கல்வியில் தமிழர்கள் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுவருவது சந்தோசமாக உள்ளது என்றார்

Related posts