காத்தான்குடியில் புதைக்க இடமில்லை எனில் கனத்தமயானத்தில் புதையுங்கள் இதற்காக கூட்டங்களை நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்!- பா.அரியநேத்திரன்,மு.பா.உ

மட்டக்களப்பு மாவட்டத்தின் சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதியின் உடலங்கங்களை புதைப்பது தொடர்பில் தமிழர்கள் 99வீதம் வாழ்கின்ற மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் மக்கள் கருத்தறியும் கூட்டத்தினை கூட்டியமையை வன்மையாக கண்டிக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

தீவிரவாதியின் உடலங்கங்களை மண்முனை தென்மேற்கு பிரதேச மயானமொன்றில் புதைப்பது தொடர்பிலாக பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களிடம் கருத்தறியுமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு அமைய, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்,  06/09/2019 பி.ப 2.30, மணிக்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலின் போதே இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு கருத்துக்கூறுகையில்,
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியிலே குண்டுத்தக்குதல் நடைபெற்றது. சம்பவத்தினை நடாத்தியவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். இதில் இரண்டு பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
இதுஇவ்வாறிருக்க, படுவான்கரைப்பிரதேசத்திற்கு தீவிரவாதியின் உடலங்கங்களை கொண்டு வருவதென்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். எம்மண்ணை அவமதிக்கும் செயலாகவே இதனைப் பார்க்கின்றேன். இப்பிரதேசத்தில் எந்தவொரு இஸ்லாமியர்களும் வாழவில்லை. 

அதேவேளை தற்போது கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவம் நடைபெறுகின்றது. இங்கு எந்த இஸ்லாமிய தலங்களும் இல்லை. அவ்வாறு இருக்கின்ற போது மண்முனை தென்மேற்கு பிரதேசம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் மக்கள் கருத்தினை எடுத்து அனுப்ப வேண்டும் என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை அடக்கசெய்ய முடியாதென்றால் கொழும்பு கனத்த மயானத்திலே அடக்கம் செய்யலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பகுதிகள் பாரம் எடுக்கவில்லையாயின் வேறு மாவட்டத்திற்கு கொண்டு அடக்கம் செய்ய வேண்டும்.
ஒருவர் இறக்கின்ற போது அவரின் உடலை முழுமையாக பாரம் எடுத்து அடக்கம் செய்ய வேண்டும் என இஸ்லாம் மதம் சொல்லுகின்றது. ஆனால் அரசியலுக்காக நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. பயங்கரவாதிகளை வெறுக்கின்றோம். 

பயங்கரவாதிகளின் உடலங்கங்களை பொறுப்பெடுக்க மாட்டோம் என்று அவர்கள் விட்ட அறிக்கையின் நிமிர்த்தமாகத்தான் இன்று 75வீதம் தமிழர்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு பகுதி கொந்தழித்த பகுதியாக உள்ளது. குறித்த உடலங்கங்களை காத்தான்குடி பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கே சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள்; மறுத்தால் ஏனைய தீவிரவாதிகளை அடக்கம் செய்த இடத்தில் அடக்கம் செய்யலாம் அதைவிடுத்து இவ்வாறான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் கூட்டுவதை முற்றாக கண்டிக்கின்றேன்.இலங்கையில் எட்டு தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றன அந்த எட்டு பயங்கரவாதிகளும் இஷ்லாமியர்களே முஷ்லிம் பள்ளிவாசல் சம்மேளனம் முஷ்லிம் அமைப்புகள் இறந்த உடல்களை உடல் எச்சங்களை அந்தந்த அவர்களின் சொந்த ஊர்களில் அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததமையே இதற்கான மூலகாரணம்,

அவரகள் இறந்த பயங்கரவாதிகளின் உடலங்களை முஷ்லிம் ஊர்களில் அடக்கம் செய்ய மறுக்கும் போது எப்படி வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இந்து மயானங்களில் அடக்கம் செய்ய சம்பாதிப்பார்கள்.

இவ்வாறான கூட்டங்களை பட்டிப்பளை பிரதேசத்திலோ அல்லது வேறு தமிழ் பிரதேச செயலகங்களிலோ நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அதுவும் கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் இடம்பெறும் பிரதேசத்தில் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் இந்த கூட்டம் நடத்துமாறு பணித்ததமையை வன்மையாக கண்டிக்கவேண்டிய விடயம்.

இறந்த இஷ்லாமிய பயங்கரவாதியின் உடல் எச்சங்களை புதைப்பதற்கு மூன்று ஆலோசனைகளை முன்வைக்கின்றேன்.
முதலாவது ஆலோசனை பயங்கரவாதியன் சொந்த ஊர் காத்தான்குடி அங்கு பொருந்தமான மையவாடி ஒன்றில் புதைப்பது.
இரண்டாவது ஆலோசனை கல்முனைகுடியில் சுட்டுக்கொல்லப்பட்ட இஷ்லாமிய பயங்கர வாதிகளின் உடலங்கள் அம்பாறை மாவட்டத்தில் மல்வத்தையில் புதைக்கபட்டது அதே இடத்துக்கு கொண்டு புதைப்பது.
மூன்றாவது ஆலோசனை ஏற்கனவே கொழும்பில் தாக்குதல் நடத்திய இஷ்லாமிய பயங்கரவாதிகளில் உடல் எச்சங்களை புதைத்த கனத்த மயானத்தில் புதுப்புது.

இந்த மூன்று தெரிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதே பொருத்தமான செயல் அதை விட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேச செயலகங்களில் கூட்டம் நடத்துவது நேரத்தை வீணாக்கும் அநாகரிக நடைமுறை எனவும் சுட்டிக்காட்டினா

தவிசாளர் சி.புஸ்பலிங்கம் 
கூறுகையில், குறித்த தீவிரவாதி வாழ்ந்த இடம் காத்தான்குடியாக இருக்கின்ற போது, அங்கு அடக்கம் செய்யாமல் வேறு இடங்களில் அடக்கம் செய்வதென்பது கேள்விக்குரிய விடயமாகும். எனவே குறித்த உடலங்கங்களை அடக்கம் செய்வதற்கு இங்கு அனுமதியில்லை என்றார்.



 

 

Related posts