காரைதீவு பிரதேசசபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா!பிரதேசசபையின் நிதி நிருவாகப் பிரிவுகள் இழுத்துமூடப்பட்டன.

காரைதீவு பிரதேசசபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள நிதி மற்றும் நிருவாகப்பிரிவுகள் உடனடியாக இழுத்துமூடப்பட்டன.
 
இச்சம்பவம் நேற்்்(11) திங்கட்கிழமை இடம்பெற்றது.
 
பிரதேசசபையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் தந்தைக்கு இருவாரங்களுக்கு முன் தொற்றுறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டிள்ளஏனையோர் தனிமைப்படுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டு பிசிஆர் சோதனை செய்யப்பட்டபோது நேற்றுமுன்தினம் அவரது மனைவிக்கும் மகனுக்கும்(ஊழியர்) தொற்று உறுதிசெய்யப்பட்டது.
 
அதனையடுத்து நேற்று(11) காரைதீவு பிரதேசசபையிலுள்ள தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட அனைத்து 65 ஊழியர்களுக்கும் அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டது. தவிசாளர் உள்ளிட்ட 64பேருக்கு நெகடிவ் அதாவது கொரோனாத் தொற்றுஇல்லை எனப் பெறுபேறு கிடைத்தது. ஒருவருக்கு பொசிட்டிவ்.
 
காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா பசீர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட இச்சோதனையின்போது ஒருவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர் நிதிப்பிரிவில் கடமையாற்றும் நிந்தவூரைச் சேர்ந்தவர்.
 
அதனையடுத்து இரு பிரிவுகளும் உடனடியாக நேற்றே இழுத்துமூடப்பட்டன

Related posts