கிழக்கு மாகாணத்திலே நாளுக்குநாள் தமிழர்களின் இருப்பும்,வளமும் சூரையாடப்பட்டு வருகின்றது.அமல் தெரிவிப்பு.

கிழக்கு மாகாணத்திலே நாளுக்குநாள் தமிழர்களின் இருப்பும்,வளமும் சூரையாடப்பட்டு கொண்டு செல்கிறது.ஒரு வாரத்திற்கு கிழக்கு மாகாணத்திலிருந்து 18 பேர் தமிழர்கள் இனமாற்றப்படுகின்றார்கள். 115 சதுரக்கிலோ மீற்றர் அளவான நிலப்பரப்பு 2009ம் ஆண்டிற்கு பின் மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கோணங்களில் அபகரிக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (அமல்) தெரிவித்தார்.

தமிழ்த் தலைமைகள் சிலர் நல்லிணக்கம் பேசிக்கொண்டு காலத்தை கழிக்கின்றார்கள். ஆனால் மற்றைய சமூக அரசியல் வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையிலே கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்குரிய வேலைகளை இராஜதந்திரமாகவும், நாசுக்காகவும் செய்துகொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 65 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிருமானிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறந்துவைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (21) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

தேசியக் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தென் இலங்கையிலே ஒரு முகத்தையும்,வட கிழக்கிலுள்ள  தமிழ்த் தலைமைகளுக்கும் ஒரு முகத்தையும் காட்டுக்கின்றார்கள் இதையும் ஒரு சிலர் நம்பி ஏமாறுவது வேதனைக்குரிய விடயமாகும்.

தமிழ் தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள  ஒரு சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டும். எங்களுடைய தலையிலே மற்றவர் மிளகாய் அரைக்கும் செயற்பாடுதான் கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்று கிழக்கு தமிழ் தலைமைகளுக்கு மற்றைய சமூக அரசியல்வாதிகள் நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது எந்த அளவிற்கு அவர்களின் செயற்பாடுகள் செல்கிறது என்பதை மக்கள் அறிந்திருக்கவேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே நாளுக்குநாள் தமிழர்களின் இருப்பும்,வளமும் சூரையாடப்பட்டு கொண்டு செல்கிறது.ஒரு வாரத்திற்கு கிழக்கு மாகாணத்திலிருந்து 18 பேர் தமிழர்கள் இனமாற்றப்படுகின்றார்கள். 115 சதுரக்கிலோ மீற்றர் அளவான நிலப்பரப்பு 2009ம் ஆண்டிற்கு பின் மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கோணங்களில் அபகரிக்கப்படுகிறது.

இங்கு எமது மாகாணத்தில் உள்ள அரசியலாவாதிகளுக்கு சிலர் பிச்சைச் சம்பளம் கொடுக்கின்றனர்.10இலட்சம் ரூபா பெறுமதியான வீதி, மற்றும் 2இலட்சம் ரூபாவிற்கு கிரவல் வீதி போன்றவற்றை கொடுத்து சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கின்ற செயற்பாடு இடம்பெறுகிறது.

நாம் எதிர்கட்சியில் இருந்துகொண்டு ஒவ்வொரு வரவுசெலவுதிட்டத்திற்கும் அரசாங்கத்தை வாழவைப்பதற்காக கைகளை உயர்த்தினோம். அதுமட்டுமல்லாது பிரதமருக்கொதிரான நம்பிக்கயில்லா தீர்மானம் வாந்தபோதும் கைகளை உயர்த்தினோம். முதல்தடவை நானும் உயர்த்தினேன். இரண்டாவது தடவை உயற்றவில்லை. இன்று கிழக்கில் என்ன நடந்துள்ளது ஒன்றுமேயில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வா அந்த தீர்வும் இன்று எமக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.

செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினுள்ளிருக்கின்ற தமிழீழ விடுதலை இயக்கம் – டெலோ ஒரு ஊடக அறிக்கையை விட்டுள்ளது.அவ் அறிக்கையில் அவர்கள் கூறியிருக்கின்றர்

இந்த அரசியல் பின்னனியில் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக நிபுனர்குழு அறிக்கையை கவனமாகவும், நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில் அதனை நிராகரிப்பதைத் தவிர வேறுதெரிவு எமக்கு இல்லை என்பதை நாம் திட்டவட்மாக தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது நாம் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியிருக்கிறனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள்ள சில உறுப்பினர்கள் அப்படியில்லை. பொறுத்திருங்கள் நாங்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியிலே நாம் ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என செயற்படுகின்றார்கள். என்றார்.

Related posts