கிழக்கு மாகாண ஆளுனராக மீள நியமிக்கப்படக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ரோகித போகொல்லாகமவை கிழக்கு மாகாண ஆளுனராக மீள நியமிக்கப்படக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி தீர்மானித்துக்கு அமைய புதிய வருடத்தில் ஆளுநர்கள் பலர் மாற்றப்படவுள்ளனர். இதில் வடக்கு ஆளுநரும் உள்ளடங்குகிறார்.

மாகாண ஆளுனர்களை முழுமையாக மாற்றம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக நாடு முழுவதுமுள்ள ஆளுனர்களிடம் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி கோரியுள்ளார்.

இதன் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநரும் தனது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இன்று அவர் கொழும்பிற்கு புறப்பட்டு செல்வதாக தெரிகிறது.

இதேநேரம் வடக்கு மாகாண ஆளுநர் வேறு மாகாணங்களிற்கு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனினும் ரோகித போகொல்லாகமவை கிழக்கு மாகாண ஆளுனராக மீள நியமிக்கப்படக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை பிரித்ததில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு முக்கிய பங்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருதகிறது.

அத்துடன் கிழக்கு மாகாண விடயங்களில் ஆளுநர் வியாழேந்திரனை முதன்மைப்படுத்துவதாகவும் அண்மையில் நடந்த காணி விடுவிப்பு நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கிழக்கு மாகாண ஆளுநர் அழைக்காது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை மாத்திரம் அழைத்து நிகழ்வை நடத்தியிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் குறித்த இந்த கடுமையான முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts