கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா – 2020 ற்கான மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களுக்குரிய காசோலை வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் 2020 ஆம் ஆண்டிற்குரிய கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவிற்கான மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களுக்குரிய விருது வழங்கல் நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலே இன்று(16) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு. சரவணமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெற்றது. 
 
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இவ் விருது வழங்கும் நிகழ்வு மிகவும் எளிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திரு. கணேசமூர்த்தி அருணன் கலந்து கொண்டார்.
 
இவ் விருது வழங்கும் நிகழ்வில் வித்தகர் விருது இளங்கலைஞர் விருது சிறந்த நூற்பரிசு விருது அரச உத்தியோகத்தருக்கான விருது குறும்படத்துக்கான விருது நூற்கொள்வனவுக்கான விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டு மொத்தமாக 36 கலைஞர்கள் காசோலை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இத் தமிழ் இலக்கிய விழாவினிலே மிக உயர்ந்த விருதாக கருதப்படுகின்ற வாழ்நாட் சாதனையாளர் சி. மௌனகுரு அவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந் நிகழ்விலே மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. த. மலர்ச்செல்வன் மண்முனை வடக்கு பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி. வளர்மதி ராஜ் பட்டிப்பளை பிரதேசசெயலக  கலாச்சார உத்தியோகத்தர் திரு. சு. ருபேஷன் வவுனதீவு பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. மு. சிவானந்தராசா வாழைச்சேனை பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. சிவக்குமார் கிரான் பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. சிவராம் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related posts