குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஆரம்பித்து வைப்பு

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையும் ( NAITA) பிள்ளைப் பராய மேம்பாட்டுத் திட்ட முகாமைத்துவப் பிரிவும்  இணைந்து ஏறாவூரில் பிள்ளைப்பராய அபி;விருத்தித் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இதற்கமைவாக ஏறாவூர் பிரதேசத்திலுள்ள நைற்றாவின் காரியாலயத்தில  சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தித் துறைக்கான பாடநெறிகள் புதன்கிழமை 21.08.2019 ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நைற்றா நிறுவனத்தின் தலைவர் நஸீர் அஹமட் கலந்து கொண்டு பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்தப் பயிற்சிநெறிகளை முடிப்பவர்கள் NVQ-4 தேசிய தொழிற்பயிற்சி மட்டம் சான்றிதழ்களை பெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts