கொரோனாப்பீதியால் கல்முனையில் மக்கள் பொருட்கள்வாங்க முண்டியடிப்பு!

கொரோனா மூன்றாவது அலை கிழக்கில் தனது தாக்குதலைத் தொடுத்திருக்கின்ற காரணத்தினால் மக்கள் ஒருவித பயபீதியிலுள்ளனர்.
 
எந்தவேளையிலும் லொக்டவுண் செய்யப்படலாம் என்ற சிந்தனையில் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தினர்.
கல்முனை பிரதான சந்தை பூட்சிற்றி போன்ற இடங்களில் மக்கள் பெருவாரியாக பொருட்களைக் கொள்வனவு செய்ததைக் காணமுடிந்தது.
அரசாங்கம் அறிவித்த சீனி வெங்காயம் மீன்ரின் விலைக்குறைப்பில் எந்தஇடத்திலும் விற்கப்படாதபோதிலும் அதைமறந்து என்னவிலைகொடுத்தாவது பொருட்களை வாங்கிவிடவேண்டும் என்ற சிந்தனையில் மக்கள் முண்டியடித்து பொருட்கள் வாங்கியதைக்காணமுடிந்தது.
 
தற்போது பெரும்பாலும் மக்கள் வீதிக்கு வருவதை தவிர்த்துவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பற்றிய சிந்தனையேயயில்லாமல் திரிந்த அந்த மக்களுக்கு தற்போது தமது பகுதியிலும் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஒருவித பதட்டம் பீதி பற்றிப்பிடித்துள்ளது.
 
அனைவரும் மாஸ்க் அணிந்தே வெளியில் செல்கிறார்கள். கிழக்கில் இதுவரை 28பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Related posts