கோட்டைக்கல்லாறு பேக்கரி வீதி புனரமைக்கப்படுகின்றது

கோட்டைக்கல்லாறு 2இல் அமைந்துள்ள பேக்கரி வீதியானது புதிய அரசாங்கத்தின் துரித கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் புதிதாக இன்று ஞாயிற்றுக்கிழமை(27) கொங்கிறீட்டு இடப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு 2இல் அமைந்துள்ள பேக்கரி வீதியானது மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டதையடுத்து கோட்டைக்கல்லாறு கிராமத்திற்கான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான த.சுதாகரன் களுதாவளை பிரதேச சபை தவிசாளருக்கு குறித்த வீதியின் மோசமான நிலமையை சுட்டிக்காட்டியதையடுத்து குறித்த வீதியானது மீள்புனரமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டு ரூபா பத்து இலட்சம் ரூபா(1000 000) நிதியில் சப்ரிகம திட்டத்தினால் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.சுமார் 86 மீற்றர் நீளமான வீதியே இவ்வாறு கொங்கிறீட் போடப்படுகின்றது.

இவ்வாறு குறித்த வீதிக்கான கொங்கிறீட் இடுவதற்கான வேலைகள் கோட்டைக்கல்லாறு கிராமத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோட்டைக்கல்லாறு 2க்கான கிராம அபிவிருத்தி சங்கப்பிரதிநிதிகள்,மாதர் கிராம அபிவிருத்தி சங்கப்பிரதிநிதிகள்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வீதிக்கான கொங்கிறீட் வேலைகளை ஆரம்பித்து வைத்தார்கள்.

Related posts