கௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் கௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் இன்று (2021.01.18) மீண்டும் ஆரம்பமாகியது.
 
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ அவர்களின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சந்தை வளாகத்தின் கட்டுமான பணிகள் இடம்பெறும்.
 
கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த அவர்களின் வழிப்படுத்தலுக்கமைய அந்த அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் இதன் கட்டுமான பணிகளை முன்னெடுக்கின்றது.
 
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
எனினும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இவ்வேலைத்திட்டத்தின் பணிகள் முழுமையாக கைவிடப்பட்டன.இச்சந்தை வளாகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோருக்கு கட்டுமானத் துறையின் அனைத்து மூலப்பொருட்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
 
இதேவேளை, சந்தை வளாகத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் www.ccity.lk இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பல கடைகளும் இன்று உத்தியோகப்பூர்வமாக கடை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
 
கொடுப்பனவுகள் தாமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் தேசிய இயந்திர நிறுவனத்தில் சேவையிலிருந்து விலகியிருந்த 50 ஊழியர்களுக்கு ரூ .233 லட்சம் மதிப்பிலான உபகாரத்தொகை வழங்கப்பட்டது.
 
குறித்த நிகழ்வின்போது கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக அனுருத்த, சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் மகேந்திர ராஜபக்ஷ, மிலான் ஜயதிலக, பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேகுணவர்தன, இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி களுபஹன, இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் உப தலைவர் பாக்ய ஜயதிலக, இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்தின் பொது மேலாளர் டீ.டி.ராஜசேகரன் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts