சகல பாடசாலைகளும் 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் !

.

கிழக்கு மாகாணத்தில் காலை 8.00 மணிக்கு பாடசாலைகள் தொடங்க அனுமதி இல்லையெனவும் வழமையாக சரியாக 7.30க்கு சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்  தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளின் அதிபர்கள் கவனமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு அதாவது மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளின் நிலைப்பாடு அறிந்து அவற்றுக்குரிய பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் பாடசாலையை 8.00 மணிக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானம் பெறப்பட்டால் மாத்திரம் அதனை உறுதிப்படுத்துவதோடு இத்தேவையை வலயக்கல்வி பணிப்பாளர் அவசியம் என உணரப்படும் பட்சத்தில்தான் மாகாண கல்வி திணைக்களம் சிபாரிசு செய்து கொடுக்க முடியும்.
ஆனால் இது எல்லாப் பாடசாலைகளுக்கும் பொருத்தமில்லை என மாகாண கல்விப்பணிப்பாளர் சுட்டிக்காட்டுவதோடு தேவையேற்பட்டால் மாத்திரம் பாடசாலையின் அதிபர்கள் அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் சிபாரிசு பெற்றுக்கொண்டு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு இது பற்றி அறியத்தருமாறும் கேட்டுக் கொண்டார்.இது ஒரு தற்காலிக ஏற்பாடகவே கையாள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts